பல்லாயிரம் ஆண்டுகளாக நாகரீகம் பெருகி, பரவி வாழ்ந்த பெருங்குடியாம் உலகின் மூத்த குடி தமிழ்க்குடி. இன்று தன்னிலை மறந்து, பழம்பெருமை மறந்து, தன்னாட்சி இழந்து, ஏதிலிகளாக மாறி நிற்கும் இக்காலச் சூழலில், தாய்த்தமிழ் நிலத்தில் தமிழ்நாட்டில் இந்தியம், திராவிடம் போன்ற இல்லாத தத்துவங்களுக்கெல்லாம் எண்ணற்ற அரசியல் கட்சிகள் உள்ள நிலையில், வாழ்வியல் தத்துவமான தமிழ்த் தேசியத்திற்கு தன்னலமற்ற, தனிமனித சர்வாதிகாரமற்ற, சனநாயகமான, உண்மையான தமிழ்த் தேசிய அரசியல் கட்சி தேவை என்ற சூழல் உருவாகியுள்ளது.
தமிழர் நலனில் ஒற்றுமை உணர்வுடன், உண்மையான நேசம் கொண்ட அனைவரும் சேர்ந்து செயல்படுவதற்கான களமாக “தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம்” அமையும். இவ்வியக்கம் எதிர்வரும் காலங்களில் தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்மொழி, தமிழர் நிலம் சார்ந்த, உரிமைகளைப் பாதுகாக்க அரசியல் கட்சியாக உருவெடுக்கும். வாருங்கள் நமக்கான களத்தை நாமே உருவாக்குவோம்!
பாராளுமன்றத் தொகுதி அளவிலான
பொதுக்கூட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிவிப்பு:
எதிர்வரும் 27.11.2024 புதன்கிழமை அன்று தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் சார்பாக எழுச்சியோடும் புரட்சியோடும் திருச்சியில் நடைபெற இருக்கும் “மாவீரர் நாள்” பொதுக் கூட்டத்திற்கான பாராளுமன்ற தொகுதி அளவிலான முதற்கட்ட ஒருங்கிணைப்புக் குழு பின்வருமாறு :-
நவம்பர் 27 அன்று ஒன்றுகூடுவோம்..
உறவாய் ஒன்றிணைய…